உலகம்
வட சீனாவில் மருத்துவமனையில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு!
வட சீனாவில் மருத்துவமனையில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு!
வட சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சின்ஹுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள செங்டே நகரில் மருத்துவமனையிலேயே செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தை அடுத்து மருத்துவமனையில் இருந்தவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்