சினிமா
அதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்.. குஷ்பூ மகள் உடைத்த அந்த விஷயம்
அதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்.. குஷ்பூ மகள் உடைத்த அந்த விஷயம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருந்தவர் தற்போது அரசியல், சீரியல் மற்றும் பட தயாரிப்பிலும் பிசியாக வலம் வருகிறார்.இவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா இயக்குநர் மணி ரத்னத்திடம் பணிபுரிந்து வருகிறாராம்.மூத்த மகள் அவந்திகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக அவருடைய அம்மா குஷ்பூ தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சினிமா வாய்ப்பு குறித்து குஷ்புவின் மகள் அவந்திகா ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” நான் எந்த ஒரு மொழி படத்திலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். தற்போது நல்ல கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நடிகைகள் என்றால் இந்த நிறத்தில் இருக்க வேண்டும், அந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்ற வரையறை சினிமாவில் உள்ளது. அதிகப்படியான உயரத்தால் எனக்கு படம் வாய்ப்பு வரவில்லை. இதனால் பட வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.