சினிமா

“அந்த மனசு தான் கடவுள்..” இயக்குநருக்கு தனுஷ் பெருந்தன்மையுடன் உதவி..!

Published

on

“அந்த மனசு தான் கடவுள்..” இயக்குநருக்கு தனுஷ் பெருந்தன்மையுடன் உதவி..!

சாதாரண நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி “இவன் எல்லாம் நடிகனா”, “இவன் படம் ஓடாது “,”ஒல்லியா இருக்கான் ” போன்ற விமர்சனங்களை தாண்டி இன்று ஒரு நடிகனாக மாத்திரமின்றி இயக்குநராக பாடலாசிரியராக தயாரிப்பாளராக வளர்ந்து நிக்கின்றார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்து இவர் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் அடுத்த மாதமளவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது தனுஷ் நயன்தாரா பிரச்சினை ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து போன்ற விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது இவர் செய்த உதவி குறித்த செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது.அதாவது தனது பட இயக்குநர் ஒருவரின் சிறுநீரக சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளார். மேலும் குறித்த இயக்குநர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் இல்லாமையால் சிகிச்சை தள்ளி போடப்பட்டுள்ளது. பலரிடம் பண உதவி கேட்டும் அனைவரும் கையை விரித்துள்ள நிலையில் இறுதியில் தனுஷிடம் இயக்குநர் தரப்பினர் உதவி கோரியுள்ளதாகவும் இவர் அதற்கு தனது கிரெடிட் கார்டினை தூக்கி கொடுத்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவினையும் இதன் மூலம் பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version