சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் அவமானப்பட்ட விஜே பிரியங்கா!! மானத்தை காப்பாற்றிய காயத்ரி..

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் அவமானப்பட்ட விஜே பிரியங்கா!! மானத்தை காப்பாற்றிய காயத்ரி..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நேருக்கு நேர் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வருடம் வருடம் டேஞ்சர் சோன் என்ற டாஸ்க் நடைபெறும். அப்படி நடக்கும் போது போட்டியாளர்கள் பாடலை பாடிவிட்டு பிரியங்கா பக்கம் நிற்க பயப்படுவார்கள்.அதற்கு காரணம் பிரியங்கா பக்கத்தில் நின்றால் டேஞ்சர் சோனுக்கு சென்று விடுவதால் அவர் பக்கத்தில் நிற்க பயப்படுவார்கள்.இந்த சீசனிலும் இந்த ரவுண்ட் தற்போது ஆரம்பித்துள்ளது. அப்போது பிரியங்கா பக்கத்தில் நிற்க பயப்பட்ட போட்டியாளர் காயத்ரி, இறுதி சுற்றுக்கு போகனும்ணு ஆசையா இருக்கு அக்கா என்று கூறியிருக்கிறார்.பின் பிரியங்கா ரியாக்ஷனை பார்த்து சரி, விடுங்க, என் தலைஎழுத்து அங்க வருகிறேன் என்று அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதனால் பிரியங்கா சற்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.அதன்பின் பாட்டுபாடி அசத்திய காயத்ரி டேஞ்சர் சோனில் இருந்து தப்பிக்க, இதை பிரியங்கா பெருமையாக கூச்சட்டுள்ளார். இதற்கு டி இமான், பிரியங்கா மானத்தை காப்பத்திய காயத்ரி என்று கூறியுள்ள பிரமோ வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version