உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு புதிய கைது வாரண்ட் பிறப்பிப்பு

Published

on

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு புதிய கைது வாரண்ட் பிறப்பிப்பு

வங்காளதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு கோர்ட்டில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 

Advertisement

இதனால் நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு, இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவரை தங்கள் நாட்டுக்கு நாடு கடத்துமாறு வங்காளதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. 

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்காளதேச கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. 

Advertisement

குறிப்பாக கூட்டுக்கொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக கைது வாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான புர்பாச்சலில் வீட்டு மனை ஒன்றை மோசடியாக வாங்கியது தொடர்பாக ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக டாக்கா பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அரசு அதிகாரிகள் ஆவர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version