சினிமா

விவாகரத்துக்கு பின் பிரபுதேவாவுடன் பேசிட்டு தான் இருக்கேன்!! முன்னாள் மனைவி ரமலத் ஓப்பன் டாக்..

Published

on

விவாகரத்துக்கு பின் பிரபுதேவாவுடன் பேசிட்டு தான் இருக்கேன்!! முன்னாள் மனைவி ரமலத் ஓப்பன் டாக்..

இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பல பரிமானங்கள் மூலம் இந்திய சினிமாவில் ஜொலித்து வருகிறார். கடந்த 1995 ரமலத் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.ஆனால் மகனுக்கு 13 வயதில் புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்தார். இதனை தொடர்ந்து இரு மகன்களை பெற்றெடுத்தனர். அதன்பின் நடிகை நயன் தாராவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தபோது மனைவி ரமலத் பிரச்சனை செய்து இருவரையும் பிரித்தார்.அதன்பின் 2011ல் விவாகரத்து செய்ய அணுகி 2012ல் சட்டப்பூர்வமாக பிரிந்தார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஹிமானி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் தன்னுடைய முன்னாள் கணவர் பிரபுதேவா பற்றி ரமலத் ஒரு பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். விவாகரத்துக்கு பின் பிரபுதேவா சார் மகன்களுடன் ரொம்பவே நெருக்கமாக பேசுவார்கள். எங்கள் இருவரிடம் டிஸ்கஷ் செய்தப்பின் தான் எதுவாக இருந்தாலும் இரு மகன்களும் முடிவெடுப்பார்கள்.இப்போது வரை நான் அவரிடம் பேசிகிட்டு தான் இருக்கிறேன். விவாகரத்துக்கு பின் இது தான் என் வாழ்க்கை என்று ஏற்றுக்கொண்டேன். எனக்கு சாரும் ரொம்பவே சப்போர்ட் ஆக இருந்தார், இந்த நிமிடம் வரை சார் என்னிடம் இருக்கிறார், எந்த விஷயமாக இருந்தாலும், மகன்கள் விஷயத்திலும் இருவரும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்போம் என்ற் ரமலத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version