இலங்கை

இலங்கை நிறுவனத்தை ஏமாற்றிய பராசக்தி படக்குழு !

Published

on

Loading

இலங்கை நிறுவனத்தை ஏமாற்றிய பராசக்தி படக்குழு !

   பராசக்தி படக்குழு , இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்தததாகவும் படப்பிடிப்பு முடிந்ததும் மீதத் தொகையைச் செலுத்ததாததால்   நிறுவனம் பராசக்தியில் பணியாற்றிய சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

Advertisement

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், இலங்கை படப்பிடிப்பு முடிந்ததால் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.

Advertisement

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த நிலையில், படப்பிடிப்பு முடிந்ததும் மீதத் தொகையைச் செலுத்ததாதல் நிறுவனம் சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டவர்கள் இலங்கையிலிருந்து சென்னை திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருவதாகத் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.       

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version