சினிமா
எந்த தைரியத்துல நடிக்க கூப்டாங்கனு தெரியல!! சூப்பர் சிங்கர் பிரகதி ஓப்பன் டாக்
எந்த தைரியத்துல நடிக்க கூப்டாங்கனு தெரியல!! சூப்பர் சிங்கர் பிரகதி ஓப்பன் டாக்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார். அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சூப்பர் சிங்கர் சீசன் முடிந்தப்பின் பாலா சார் என்னை பார்த்து உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், என் படத்தில் நீங்கள் பாடணும் என்று சொன்னார்.அதன்பின் அவர் படத்தில் நடிக்கணும் என்று நினைத்தேன், அவரும் நீ நடிச்சா முதலில் என் படத்தில் தான் நடிக்கணும் என்று சொன்னார். ஆனால் அது தாரைத்தப்பட்டை படம் கிடையாது, வேறொரு படம். இன்னொரு படத்தில் தான் என்னை அறிமுகப்படுத்த நினைத்தார். ஆனால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை.எனக்கு சீசன் முடிந்தபோது நடிக்க வாய்ப்புகள் வந்தது. பாடுவது என்றால் எனக்கு தெரியும், ஆனால் நடிக்க எப்படி தெரியும்?. எந்த தைரியத்தில் நடிக்க கூப்பிடுறாங்கன்னு அப்போது புரியல, அப்போது அந்த படம் டிராப்பாக என்ன காரணம் என்று எனக்கு தெரியாது என்று பிரகதி தெரிவித்துள்ளார்.