சினிமா
மீண்டும் தள்ளிப்போன வாடிவாசல்..! கடுப்பாகிய சூர்யா ரசிகர்கள்…
மீண்டும் தள்ளிப்போன வாடிவாசல்..! கடுப்பாகிய சூர்யா ரசிகர்கள்…
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகிய எந்த ஒரு படமும் அதிக வசூலை கொடுக்கவில்லை கடந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய கங்குவா திரைப்படம் ஒரு சில விமர்சனங்களினால் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ ,rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.ஜல்லிக்கட்டினை கதைக்களமாக வைத்து எடுக்கப்படவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் படம் குறித்து கேட்டபோது அவர் ஜூலையில் பட வேலைகள் ஆரம்பிப்பதாக கூறியிருந்தார்.ஆனால் தற்போது ஆகஸ்ட் 8 ஆம் தேதி பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக வெற்றிமாறன் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்து உள்ளது. இருப்பினும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்க படுகின்றது.