சினிமா

என் லக்கி சாம் இவர் தான்.. சமந்தா சொன்ன அந்த பிரபல நடிகர் இவரா?

Published

on

என் லக்கி சாம் இவர் தான்.. சமந்தா சொன்ன அந்த பிரபல நடிகர் இவரா?

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா.சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, கோலிவுட்டில் உங்களுடைய லக்கி சாம் யார் என்று சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, விஜய் சார் என்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார். தற்போது சமந்தாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version