சினிமா

தியட்டரில பட்டாசை ரெடி பண்ணுங்கப்பா! மங்காத்தா2 படத்தின் ரகசியத்தைப்பகிர்ந்த வெங்கட்பிரபு!

Published

on

தியட்டரில பட்டாசை ரெடி பண்ணுங்கப்பா! மங்காத்தா2 படத்தின் ரகசியத்தைப்பகிர்ந்த வெங்கட்பிரபு!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரசிகர்களை சந்தோசப்படுத்தும் வகையில் அஜித் குமாரை பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சி மிகவும் உற்சாகமான சூழ்நிலையுடன் நடைபெற்றது. அந்நிகழ்வின் போது நடுவர்கள், நடிகர் அஜித் குமார் பற்றிய சுவாரஸ்யமான கேள்விகளை வெங்கட் பிரபுவிடம் எழுப்பியிருந்தனர்.அதன்போது நடுவர்கள் “மங்காத்தா” படம் 2011ம் ஆண்டு வெளியான போது தமிழ் திரையுலகில் புதிய திருப்பத்தை உருவாக்கியிருந்தது.  அப்படத்தில் அஜித் குமாரின் ஸ்டைலிஷ் லுக்கை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள். அவ்வாறு திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அந்தப்  படத்தின் 2ம் பாகம் எப்ப வெளியாகும் என வெங்கட் பிரபுவைப் பார்த்துக் கேட்டிருந்தனர்.அதற்கு வெங்கட்பிரபு “எனக்கும் மங்காத்தா 2 எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது!” என்று தெரிவித்திருந்தார். மேலும் தன்னை முதன் முதலில் நம்பிப் படம் கொடுத்தவர் அஜித் குமார் தான்!”என்றும் கூறி அஜித்துக்கு தன் நன்றியையும் தெரிவித்தார்.அத்துடன் தான் மங்காத்தா 2 படத்தை எடுப்பதற்காக காத்திருக்கின்றேன். வாய்ப்பு கிடைத்தவுடன் படப்பிடிப்பினைத் தொடங்கிவிடுவதாகவும் கூறியுள்ளார். “மங்காத்தா 2” பற்றி வெங்கட் பிரபு பேசிய கருத்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version