இலங்கை

தென்னிலங்கையில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி சூடு

Published

on

தென்னிலங்கையில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி சூடு

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர் வாகனத்​தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version