இந்தியா

புதுச்சேரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்; சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

Published

on

புதுச்சேரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்; சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமான மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.ரெட் ரூட்ஸ் கிரிக்கெட் அகாடமி நடத்திய இந்த மாரத்தானில், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 5 கிலோமீட்டர் தூரத்திலும், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கிலோமீட்டர்  தூரத்திலும் ஓடினர். குறிப்பாக, 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர்.தலைவர் கௌதம பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல அதிகாரி இன்பராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியை துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அருணகிரி, இணைச் செயலாளர் ஞானசேகர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்தப் போட்டியில், பிள்ளையார் குப்பம் மணிகண்டன் முதல் பரிசையும், சிராஜ்பாபு இரண்டாம் பரிசையும், கிருபாநிதி மூன்றாம் பரிசையும் பெற்றனர். சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் ராஜா நன்றியுரை ஆற்றினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version