இந்தியா
எங்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?
எங்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?
“தாக்குதல் தொடங்கியபோது நாங்கள் போலீஸை அழைத்தோம். மறுபக்கத்தில் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் என் கணவரையும் மாமனாரையும் கண்முன்னே வெட்டிக்கொன்றனர். அவர்களது உடல்கள் எங்கள் வீட்டின் அருகே 3 மணி நேரம் கிடந்தன என்று தனது 6 வயது மகளை கட்டிஅணைத்தபடி சம்பவத்தை நேரில் பார்த்த 32 வயதான பிங்கி தாஸ் கண்ணீர்மல்க கூறினார்.பிங்கி தாஸால் பேச முடியவில்லை, இடையில் சிறிது நேரம் சுயநினைவை இழந்தது போல் மாறினார். வெள்ளிக்கிழமைஅவரது கணவர் சந்தன் தாஸ் (40) மற்றும் அவரது மாமனார் ஹர்கோபிந்த் தாஸ் (70) ஆகியோர் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது திடீர் வன்முறையாக மாறியதால், ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட 3 பேரில் தந்தை மற்றும் மகன் அடங்குவர். மேலும் குறைந்தது 15 போலீசார் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய ஆயுதப்படைகளை பாதுகாப்பிற்கு நிறுத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.”எனக்கு யார் நீதி வழங்குவார்கள்? இப்போது நாங்கள் எப்படி வாழ்வது?” என்று ஜாஃப்ராபாத் கிராமத்தில் உள்ள தனது வீடு சூறையாடப்பட்ட அதிர்ச்சி தருணங்களை நினைவு கூர்ந்தார் பிங்கி தாஸ்.சுமார் 20 கி.மீ தூரத்தில், காசிம்நகர் கிராமத்தின் காசிப்பூர் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் பிங்கியின் கேள்விகள் எதிரொலித்தன. “எனக்கு நீதி வேண்டும். என் கணவர் மிகவும் இளமையாக இருந்தார்” என்று தனது 2 வயது மகளை கையில் ஏந்தியபடி செலிமா பீபி கூறினார். செலிமாவின் கணவ, 21 வயதான இஜாஸ் அகமது, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே, சஜூர்மோர் கிராசிங் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பிங்கியின் வீட்டிற்குச் சென்றபோது, கதவு மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. அறைகள் சூறையாடப்பட்டன. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த கிராமம் வெள்ளிக்கிழமை வன்முறையின் கடும் பாதிப்பை சந்தித்தது. 3 வீடுகளும் , கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல குடியிருப்பாளர்களின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன .பிங்கியின் கிராமம் அமைந்துள்ள தின்புகுரியா கிராம பஞ்சாயத்து உறுப்பினரான ஸ்ரபோனி தாஸ் கூறுகையில், அவர்கள் உள்ளே நுழைந்தபோது தனது வீட்டிற்கும் தீ வைத்தது என்றார். “நாங்கள் பயப்படுகிறோம், நாங்கள் மீண்டும் இங்கு வாழ முடியுமா என்று தெரியவில்லை” என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தாஸ் கூறினார்.சம்செர்கஞ்ச் டி.எம்.சி எம்.எல்.ஏ அமிருல் இஸ்லாம் மற்றும் பாஜகவின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் உத்தம் குமார் தாஸ் ஆகியோர் பிங்கியின் வீட்டின் அருகே ஒன்றாக நின்று கொண்டிருந்தனர். “இதைச் செய்தவர்கள் மிருகங்கள். நாங்கள் குடும்பத்துடன் நிற்கிறோம்” என்று இஸ்லாம் கூறினார். ஏராளமான இந்துக்களின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது வேறு பல கிராமங்களிலும் நடந்தது” என்று தாஸ் கூறினார்.பிங்கியின் கூற்றுப்படி, “இளைஞர்கள்” குழுக்கள் “வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இருந்து” கிராமத்தில் சுற்றித் திரிந்து, குண்டுகளை வீசியும், வீடுகள் மீது கற்களை வீசியும் தொடங்கினர். “அவர்கள் எங்கள் வீட்டை 4 முறை தாக்கினர். இறுதியாக, அவர்கள் மரக் கதவை உடைக்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.”அவர்களில் சிலர் ஒவ்வொரு அறையாக வீட்டை சூறையாடத் தொடங்கியபோது, ஒரு குழு என் மாமனாரைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றது. பின்னர், என் கணவரை பிடித்து இழுத்தனர். அவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்தனர். நான் (தாக்குதல் நடத்தியவர்களிடம்) கெஞ்சினேன், அவர்களின் கால்களைப் பிடித்தேன், ஆனால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தினர்” என்று பிங்கி கூறினார். அவருக்கு 16 மற்றும் 11 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.”நாங்கள் உதவியற்றவர்களாக இருந்தோம். குழந்தைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஒளிந்து கொண்டேன். இப்போது, குழந்தைகள் தங்கள் தந்தை மற்றும் தாத்தாவைத் தேடுகிறார்கள்” என்று பிங்கியின் மாமியார் பருல் தாஸ் கூறினார். சந்தன் ஒரு கொத்தனார் மற்றும் அவரது கணவர் ஒரு விவசாயி, அவருக்கு நிலம் இருந்தது.இதற்கிடையில், செலிமாவின் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய கூட்டம் வெளியே கூடியிருந்தது. “இறந்த பிறகு எந்த அரசியல்வாதியோ, போலீஸ்காரர்களோ எங்கள் வீட்டிற்கு வரவில்லை. மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்று எங்களிடம் கூறப்பட்டது, “என்று இஜாஸின் மாமா ஷாஹித் ஷேக் கூறினார்.செலிமாவின் கூற்றுப்படி, இஜாஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த சென்னைக்கு புறப்படத் தயாராக இருந்தார். “அவர் மார்ச் 28 ஆம் தேதி ஈத் பக்ரீத் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை காலை, அவர் இஸ்லாம்பூரில் உள்ள ஒரு மாமாவைப் பார்க்கச் சென்றார். வீடு திரும்பும் போது, சஜுர்மோர் என்ற இடத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் சிக்கினார். அங்கிருந்து யாரோ எங்களை அழைத்து, அவர் போலீசாரால் சுடப்பட்டதாகக் கூறினார்,” என்று அவர் கூறினார்.உள்ளூர்வாசிகள் குழு இஜாஸை அருகிலுள்ள ஜாங்கிபூர் மருத்துவமனைக்கும் பின்னர் முர்ஷிதாபாத் பொது மருத்துவமனைக்கும் கொண்டு சென்றது, அங்கு அவர் காயங்களால் இறந்தார். “இஜாஸ் தனது தந்தை, தாய், மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். வியாழக்கிழமை இரவு அவருடன் சுற்றுலா சென்றோம். வெள்ளிக் கிழமை, அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்” என்று இஜாஸின் குழந்தை பருவ நண்பர் ஓடுத் ஷேக் (22) கூறினார்.இந்த 3 மரணங்களையும் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கிடையில், ஏராளமான போலீசார், விரைவு அதிரடிப் படை மற்றும் பி.எஸ்.எஃப் சஜூர்மோர் கிராசிங்கில் குவிக்கப்பட்டனர்.