சினிமா

சிவகார்த்திகேயனின் “மதராஸி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

Loading

சிவகார்த்திகேயனின் “மதராஸி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிகப்பெரிய ஹிட் ஆன அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அடுத்தகட்டத்திற்கு சென்றதன் பிறகு, அவர் நடித்து வரும் பராசக்தி படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வந்த மதராஸி படத்தின் ஷூட்டிங் இடையிடையாக நிறுத்தப்பட்டது. இப்படம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டதற்கு காரணம் முருகதாஸ் ஹிந்தியில் “சிக்கந்தர்” என்ற படத்தை இயக்க கைவிடப்பட்டதால் தான். ஆனால் தற்போது சிக்கந்தர் ரிலீஸ் ஆகி விட்ட நிலையில் முருகதாஸ் மீண்டும் மதராஸி படத்தின் மீதான கவனத்தை திருப்பி படத்தை முடிக்கத் தொடங்கி இருக்கிறார்.இந்நிலையில் “மதராஸி” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதராஸி படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த தேதி மிலாத் நபி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் படம் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களில் திரைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படம் வெளியீட்டிற்காக பாரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version