பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… செப். 5-ல் ‘மதராஸி’ வெளியீடு

Published

on

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… செப். 5-ல் ‘மதராஸி’ வெளியீடு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா, தனுஷ் – சிம்பு ஆகிய நடிகர்களுக்கு இணையாக பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் ரசிகர்கள் பட்டாளத்திலும் ஒரு பெரிய நட்சத்திரமாக நடிகர் சிவகார்த்திகேயன் உருவாகியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அமரன் படம் 300 கோடிக்கு மேல் வசூலித்ததன் மூலம் டாப் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்தியேன இணைந்துள்ளார்.இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தை ஸ்ரீலக்ஷ்மி பிரசாத்தின் ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிஜு மேனன், வித்யுத் ஜம்வால் ருக்மினி வசந்த், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், மதராஸி திரைப்படம் எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்ளுக்கு ஹாப்பி நியூஸ் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி மதராஸி படம் வெளியாகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version