இலங்கை

தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் – நாமல் ராஜபக்ச

Published

on

தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் – நாமல் ராஜபக்ச

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;
வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது. இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Advertisement

இது அனைத்துவகையான அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி போல தோன்றுகின்றது. இவ்வாறான விடயங்களை செய்யவேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தும் நான் தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

வீதியை திறக்கவேண்டும் என்றால் முழுமையான பாதுகாப்பு சரிபாப்பிற்கு பின்னரே அதனை திறக்கவேண்டும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு எந்தவித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அதனை திறக்கவேண்டும்-என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version