பொழுதுபோக்கு

நடிகை ஸ்ருதிஹாசனின் ஆக்ரோஷமான பஞ்ச்… குத்துச்சண்டை செய்யும் வீடியோ வைரல்

Published

on

நடிகை ஸ்ருதிஹாசனின் ஆக்ரோஷமான பஞ்ச்… குத்துச்சண்டை செய்யும் வீடியோ வைரல்

இசையமைப்பாளர், பாடகர், மாடல், நடிகை என பன்முகத்திறமையோடு பிஸியாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து முடித்திருக்கிறார்.இதனைத்தொடர்ந்து, இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த வயதிலும் இப்படி ஒரு திறமையா என்றும் வியந்து பேச தொடங்கியுள்ளனர்.கூலி படத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு கையில் க்ளோவ்ஸ் இல்லாமல் பயிற்சி எடுக்கிறேன் என தெரிவித்தார்.  அப்போது பயங்கர ஆக்ரோசமாக அவர் பயிற்சி செய்வது போல உள்ளது. பின்பு காலால் சண்டை பயிற்சி செய்வதும் பதிவாகியுள்ளது.ஆனால், இந்த பயிற்சி அடுத்த படத்திற்காகவா அல்லது கூலி படத்திற்கா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலர் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version