சினிமா

பாக்ஸ் ஆபிஸில் அபார சாதனை படைத்த ‘குட் பேட் அக்லி’ ..! கோடிக்கணக்கில் குவியும் வசூல்!

Published

on

பாக்ஸ் ஆபிஸில் அபார சாதனை படைத்த ‘குட் பேட் அக்லி’ ..! கோடிக்கணக்கில் குவியும் வசூல்!

தமிழ் திரையுலகில் எப்பொழுதும் நடிகர்கள் வரிசையில் முதலாவது இடத்தைப் பெற்றிருக்கும் அஜித் குமார், தற்போதும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை மகிழ்விக்கச் செய்யும் வகையில் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் ஏப்ரல் 10ம் திகதி வெளியாகிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இதற்குச் சிறந்த சான்றாக உள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி சில நாட்களிலேயே வசூல் வெற்றியில் புதிய வரலாற்றைப் படைக்கத் தொடங்கிவிட்டது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஒரு புதிய திரைக்கதையோடு உருவாகியிருந்தது. இதில் அஜித் குமார் தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. அந்தவகையில் படம் வெளியாகிய பிறகு அதன் வசூல் நிலவரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக முன்னேறி வருகின்றது.படம் ரிலீஸான 2 நாட்களில் ரூ.100 கோடியை எட்டி சாதனை செய்தது. தற்போது வெளியாகிய தகவலின் படி, 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனை, அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான அத்தியாயமாக கருதப்படுகின்றது. இதற்கு முன் இந்த அளவிலான வசூல் சாதனை அவரது படங்களுக்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version