இந்தியா
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்… ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்… ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
புதுச்சேரி தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) T வீரவல்லவன்,வட்ட ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ், மற்றும் உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் குற்ற பிரிவு காவலர்கள் ஆகியோருடன் தன்வந்திரி நகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட புகையிலை பொருட்களை விற்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.லதா ஸ்டீல் ஹவுஸ் பின்புறம் உள்ள மகாத்மா நகர் சந்திப்பில் ஒரு நபர் தடை செய்யப்பட புகையிலை பொருட்களை விற்று கொண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்த போது ஒரு நபர் PY 01 AF 9608 Hero Honda Splendor Plus மோட்டார் சைக்கில் கட்ட பையை மாட்டி கொண்டு தடை செய்யப்பட புகையிலை பொருட்களை விற்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்த போது அவரது பெயர் ஜெயகுமார் (46) S/o கலியவரதன், எண்.33, வன்னியர் வீதி, பாக்கமுடையான்பேட், லாஸ்பேட்டை, புதுச்சேரி என்று தெரிவித்தார். அதன் பிறகு அவரை கைது செய்து விசாரணை செய்த போது, அவரும் அவரது நண்பர் மகாத்மா நகரை சேர்ந்த குலாப் பாஷாவும் சேர்ந்து தடை செய்யப்பட புகையிலை பொருட்களை விற்று வந்த குற்றத்தை ஒப்புகொண்டார்.அதன் பிறகு குலாப் பாஷாவை கைது செய்து அவரது வீட்டை ஆய்வு செய்த போது ஒன்பது மூட்டைகளில் இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு, துரித விசாரணை செய்து வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து சுமார் 1,50,000/- மதிப்புடைய தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சிறப்பு விசாரணை குழுவிற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் புதுச்சேரி மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.