இலங்கை

விளையாட்டால் பிரிந்த இளைஞனின் உயிர் ; பக்கத்து வீட்டு சிறுவனால் வந்த வினை

Published

on

விளையாட்டால் பிரிந்த இளைஞனின் உயிர் ; பக்கத்து வீட்டு சிறுவனால் வந்த வினை

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.

Advertisement

பெற்றோர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு வீட்டில் தனியாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்துகொண்டுருந்த 18 வயது இளைஞன் முகமது கைஃப்பை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளான்.

அப்போது சிறுவனின் விரல் தவறுதலாக துப்பாக்கி டிரகரில் பட்டு இளைஞன் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் துப்பாக்கியை கைப்பற்றி இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version