இலங்கை

16 சிறார்களைத்  துஷ்பிரயோகித்த- பயிற்சியாளர் நேற்றுக் கைது!

Published

on

16 சிறார்களைத்  துஷ்பிரயோகித்த- பயிற்சியாளர் நேற்றுக் கைது!

16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்சியாளர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் 16 சிறுவர்களைப் பாலியல் துஷ்பியோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்தவிடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. சந்தேகநபர் சில நாள்களாகத் தலைமறைவாகியிருந்தநிலையில், கிளிநொச்சி குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அறிவியல்நகர் பகுதியில் வைத்து சந்தேகநபரை நேற்றுக்  கைது செய்துள்ளனர்.

Advertisement

விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version