விளையாட்டு

6 ஆண்டுக்குப் பிறகு வென்ற ஆட்ட நாயகன் விருது… கையில் வாங்கிய தோனி சொன்ன அந்த வார்த்தை!

Published

on

6 ஆண்டுக்குப் பிறகு வென்ற ஆட்ட நாயகன் விருது… கையில் வாங்கிய தோனி சொன்ன அந்த வார்த்தை!

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 30-வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய  சென்னை அணி 20 ஓவரில் 3 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தது. சென்னை அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தாலும், மிடில் ஆடரில் களமாடிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறி அவுட் ஆகினர். களத்தில் இருந்த தோனி – துபே தோனி லக்னோ பவுலிங்கை சமாளித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. 6 ஆண்டுக்குப் பிறகு வென்ற ஆட்ட நாயகன் விருதுஇந்நிலையில், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தோனி அணியின் வெற்றியை உறுதி செய்ய 11 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸரை பறக்கவிட்டு 26 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ஆயுஷ் படோனியை ஸ்டெம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக 200-வது ஆட்டமிழப்பை பதிவு செய்தார். அத்துடன் அப்துல் சமத் விக்கெட்டை மிரட்டலான ரன் அவுட் மூலம் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, தோனிக்கு இந்த ஆட்டத்தின் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  இதன்மூலம், ஐ.பி.எல் வரலாற்றில் ஆட்ட நாயகன் (பி.ஓ.டி.எம்) விருதை வென்ற மிக வயதான வீரர் எம்எஸ் தோனி (43) என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இந்த விருதை பெற்றுக் கொண்ட தோனி,”அவங்க ஏன் எனக்கு விருது கொடுக்குறாங்கன்னு தெரியல?, நூர் (அகமது) ரொம்பவே நல்லா பந்து வீசியிருந்தார். அவருக்கு கொடுத்திருக்கலாம்” என்று கூறினார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை மிகச் சிறப்பாக வீசிய  நூர் அகமது ஒரு ஓவருக்கு 3.20 ரன் என்கிற எக்கனாமியில் வெறும் 13 ரன்கள் தான் விட்டுக் கொடுத்திருந்தார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version