உலகம்
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியேகோ நகரத்தில் நேற்றுக்காலை திங்கட்கிழமை(14) 10.08 மணியளவில் 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 13.4 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 193 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.