சினிமா

அல்லு அர்ஜூனுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா..!எதற்காகத் தெரியுமா..?

Published

on

அல்லு அர்ஜூனுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா..!எதற்காகத் தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தற்பொழுது புஷ்பா 2 படத்தை முடித்த பின்பு, இன்னொரு மிகப்பெரிய கூட்டணிக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தவகையில் நடிகர் அல்லுஅர்ஜூன் தற்பொழுது பிகில் பட இயக்குநர் அட்லியுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவர்கள் இருவரும் இணையும் இப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு 800 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும், படத்தின் கால்சீட் விவகாரத்தால் அப்படத்திலிருந்து பிரியங்கா விலகியதாகவும் அவருக்குப் பதிலாக நடிகை நயன்தாரா களத்தில் இறங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகையாக ரசிகர்களின் மனங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் வெவ்வேறு மொழிகளில் நடித்ததற்குப் பிறகு, இந்திய சினிமாவிலும் மாபெரும் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.அந்தவகையில் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா மறுத்தது அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. எனினும் நடிகை நயன்தாரா அப்படத்தில் ஹீரோயினியாக நடிப்பதென்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version