சினிமா
உன்னை நினைக்காத நாளே இல்லை, எமோஷ்னலான நடிகை சிம்ரன்
உன்னை நினைக்காத நாளே இல்லை, எமோஷ்னலான நடிகை சிம்ரன்
90 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.இடுப்பை ஆட்டியே மக்களை கவர்ந்த இவர் கிளாமர் மற்றும் ஹோம்லி என இரண்டிலும் அசத்தி வந்தார்.பீக்கில் இருந்த போதே தனது நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்தவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து சிறப்பாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் மறைந்த நடிகையும், அவரது சகோதரியுமான மோனல் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.