இலங்கை
குடிபோதையில் செலுத்தப்பட்ட வாகனம் விபத்து ; இருவர் பலி
குடிபோதையில் செலுத்தப்பட்ட வாகனம் விபத்து ; இருவர் பலி
குருநாகலை – தம்புள்ளை A-6 வீதியில் இன்று அதிகாலை வேளையில் கெப் ஒன்றும் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் காயமடைந்து குருநாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குக் காரணமான கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் குடிபோதையில் வாகனம் செலுத்தியமையும் தெரியவந்துள்ளது