சினிமா

சூரியிடம் அதிரடியாகப் போட்டி போடும் சந்தானம்…! தியட்டரை கலக்க வரும் இரு படங்கள்..!

Published

on

சூரியிடம் அதிரடியாகப் போட்டி போடும் சந்தானம்…! தியட்டரை கலக்க வரும் இரு படங்கள்..!

தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பாதையைப் பார்த்தல் கடந்த சில ஆண்டுகளாகவே நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக மாறிக்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னணி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். அத்தகைய நடிகர் தற்போது “விடுதலை” படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக தன்னை நிரூபித்துள்ளார்.2024-ல் மாபெரும் ஹிட் கொடுத்த வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு, மீண்டும் ஹீரோ அவதாரத்தில் நடிக்கின்றார் சூரி. அவர் தற்பொழுது நடிக்கும் “மாமன்” படம் சிறந்த குடும்ப படமாக காணப்படுகின்றது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சந்தான பாரதி மற்றும் சௌந்தர் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த மாமன் திரைப்படம் 2025 மே 16ம் திகதி உலகமெங்கும் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது.  அதே நாளில் சந்தானம் நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்’ படமும் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த இரண்டு நடிகர்களும் நகைச்சுவைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள். எனினும் தற்போது அவர்கள் இருவரும் ஹீரோக்களாக வளர்ந்து வருவதால், இந்த நாள் தமிழ் சினிமாவில் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version