இலங்கை

தற்போதைய வெப்ப நிலை குறித்து எச்சரிக்கும் வைத்தியர்கள்!…

Published

on

தற்போதைய வெப்ப நிலை குறித்து எச்சரிக்கும் வைத்தியர்கள்!…

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறுகிறார். 

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறுகிறார். 

Advertisement

நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நிபுணர், சாதாரண மக்களும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட, 

“மழை பெய்தாலும், நாமக்கு கடுமையான வெப்பம் உள்ளதை உணர முடிகிறது. அதற்கு முக்கிய காரணம், சுற்றுச்சூழலில் நீராவி மிக அதிகமாக இருப்பதால், மேகங்களை சுற்றியுள்ள நீராவி உயராமல் தடுக்கப்படுகின்றன. எனவே, நாமக்கு அதிகமாக வியர்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

Advertisement

எனவே, நீங்கள் வெளியே சென்றால், கடுமையான சூரிய ஒளியால் பாதிக்கப்படலாம். இது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெளியில் வேலை செய்பவர்கள், முக்கியமாக அதிக வெப்பநிலை காரணமாக, அசௌகரியத்தை அனுபவிக்கலாம். தலைச்சுற்றல், உடல் வலிகள் மற்றும் அதிகப்படியான வியர்வை ஏற்படலாம். 

இந்த நிலைமை தொடர்தால் மரணம் கூட ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் அதிகமாக பாதிக்கலாம். 

நீங்கள் கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டியிருந்தால், வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு குடை அல்லது சிறப்பு ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். நம் உடல்கள் வியர்க்க அனுமதிக்க வேண்டும். இந்த வியர்வை உடலை விட்டு வெளியேறும்போது, உடல் வெப்பநிலை குறைகிறது. 

Advertisement

நீங்கள் அதிக திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். குடிக்க வேண்டும். குறிப்பாக கஞ்சி, சூப், தேநீர் மற்றும் ஜீவானி போன்ற தாதுக்கள் நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வது மிக அவசியம்.”
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version