விளையாட்டு
PBKS vs KKR LIVE Score: டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் – கொல்கத்தா பவுலிங்
PBKS vs KKR LIVE Score: டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் – கொல்கத்தா பவுலிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு முல்லன்பூரில் நடைபெறும் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs KKR LIVE Cricket Score, IPL 2025டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது. அதனால், கொல்கத்தா அணி பவுலிங் போடும். இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி.பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 33 போட்டிகளில், கொல்கத்தா 21 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் பஞ்சாப் 12 முறை வெற்றி பெற்றுள்ளது.