இலங்கை

அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது

Published

on

அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது

  தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிவந்த இந்த முற்போக்குவாதிகளுக்கு, கடந்த கால ஆட்சியாளர்களைக் காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுவதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப சர்வதேசத்துக்கு முன்னால் தங்களது தோற்றப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version