இலங்கை

அன்னை பூபதியின் நினைவேந்தலை அரசியலாக்க நடவடிக்கைகள்

Published

on

அன்னை பூபதியின் நினைவேந்தலை அரசியலாக்க நடவடிக்கைகள்

உடன் தடுத்து நிறுத்துமாறு மகள் பொலிஸில் முறைப்பாடு

வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று, அன்னை பூபதியின் நினைவேந்தலைச் செய்ய முற்படுகின்றனர். நினைவேந்தலை அரசியலாக்கும் இத்தகைய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்னை பூபதியின் மகள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

Advertisement

தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மூவர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று நினைவேந்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஊர்வலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பேரணிகளையும் முன்னெடுக்கவுள்ளனர்.

அமைதியாகச் செய்யவேண்டிய இந்த நினைவேந்தலை இந்த மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர். இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்துநிறுத்த வேண்டும் – என்றவாறாக அவர் தனது முறைப்பாட்டில் பதிவுசெய்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version