உலகம்

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்த மாலைதீவு!

Published

on

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்த மாலைதீவு!

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது. பாலஸ்தீனிய மக்களுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே மாலைதீவு, இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்துள்ளது.

மாலைதீவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானத்திற்கு அந்நாட்டின் ஜனாதிபதி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

Advertisement

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கும் இந்த நடவடிக்கை பாலஸ்தீன மக்களிற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டுழியங்கள் மற்றும் இனப்படுகொலைகளிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் மாலைதீவு அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என ஜனாதிபதி முகமட் முய்சு தெரிவித்துள்ளார்.

மேலும், இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்துவரும் இஸ்ரேல் மாலைதீவில் இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு வருவதால் அந்த நாட்டிற்கு செல்வதை தனது பிரஜைகள் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 இல் மாலைதீவிற்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளில் 0.6 வீதத்தினரே இஸ்ரேலியர்கள். 214000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளில் 59 பேரே இஸ்ரேலியர்கள் என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

Advertisement

காசா போரிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அரசாங்கம் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்க வேண்டும் என எதிர்கட்சி ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வந்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version