இலங்கை

ஐரோப்பிய வாழ் குடும்ப பெண்ணுடன் யாழ் குடும்பஸ்தர் தலைமறைவு; கண்ணீர் விடும் மனைவி பிள்ளைகள்

Published

on

ஐரோப்பிய வாழ் குடும்ப பெண்ணுடன் யாழ் குடும்பஸ்தர் தலைமறைவு; கண்ணீர் விடும் மனைவி பிள்ளைகள்

யாழில் 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் குடும்ப பெண்ணுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பிய நாடொன்றில் வாழும் 40 வயதை கடந்த குறித்த பெண்ணுக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளதாகவும், கணவனை விவாகரத்துச் செய்து வாழ்ந்து வந்ததகவும் கூறப்படுகின்றது.

Advertisement

தனது 7 மாதக் குழந்தை உட்பட 3 பிள்ளைகளையும் மனைவியையும் கைவிட்டு மனைவி பிள்ளைகளை கைவிட்டு குடும்பப் பெண்ணுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த இரு வருடங்களுக்கு முன் தனது உறவுக்காரர் ஒருவரின் திருமணத்திற்காக நாட்டுக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த குடும்பஸ்தரே யாழ்ப்பாணம் ஏற்றி வந்துள்ளார்.

இதன் பின்னரே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக மனைவி கூறுகின்றார். பெண்னின் தொடர்பின் பின்னர் கணவனின் நடவடிக்கைகள் திடீரென மாற்றமடைந்ததாகவும் ஒரு கட்டத்தில் தான் வெளிநாடு செல்லப்போவதாகவும் அதற்காக ஒரு பெண்ணை போலியாக பதிவுத்திருமணம் செய்ய வேண்டியுள்ளது எனவும் கூறிய போது தான் அதற்கு மறுப்புத் தெரிவித்து சண்டை போட்டதாகவும் மனைவி கூறுகின்றார்.

Advertisement

இவ்வாறான நிலையிலேயே கடந்த வாரம் முதல் கணவன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு சென்ற கணவன் தனது தொலைபேசிக்கு தொடர்பு எடுத்து தான் நோர்வே செல்ல ஆயத்தப்படுத்துவதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி, உடனடியாக வீடு திரும்புமாறு கோரிய போது தனது தொலைபேசி இணைப்பை தடை செய்துவிட்டார் என மனைவி கூறுகின்றார்.

Advertisement

அதேவேளை கணவனின் உறவுகளும் தொடர்பு கொண்ட போதும் கணவர் தன்னை தேடவேண்டாம். தான் வெளிநாடு சென்ற பின் தொடர்பு கொள்கின்றேன் என அவர்களுக்கும் கூறி இணைப்பை துண்டித்துள்ளாராம்.

இதன் பின்னர் உறவினர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சம்பவம் அம்பலமாகியுள்ளது .

கணவனை கொழும்பு கொண்டு சென்று அங்கு இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளமை கணவனின் நண்பர்கள் மூலம் தனக்கு தெரியவந்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது கணவனை வெளிநாடு செல்லவிடாது தடுப்பதற்கு பொலிசாரின் உதவியை நாடி அவரது பாஸ்போட்டை நீதிமன்றம் மூலம் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனைவி தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version