இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து; அடுத்த ஆண்டுதான் இனி கருடசேவை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து; அடுத்த ஆண்டுதான் இனி கருடசேவை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்க உள்ள பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.மே மாதம் 12-ந்தேதி, ஜூலை மாதம் 10-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி, நவம்பர் மாதம் 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கருடசேவையை ரத்து செய்ததற்கான காரணங்களையும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதம் 11-ந்தேதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் (3-வது நாள்) நடப்பதாலும், செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் 4-ந்தேதி கார்த்திகை தீபம் நடப்பதாலும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.