சினிமா
புதிய லுக்கில் கலக்கும் ஜனனி..! இன்ஸ்டாவில் ரெண்டான அழகிய போட்டோஷூட்..!
புதிய லுக்கில் கலக்கும் ஜனனி..! இன்ஸ்டாவில் ரெண்டான அழகிய போட்டோஷூட்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் ஜனனி. அந்நிகழ்ச்சியின் மூலம் அதிகளவான ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, விளம்பரங்கள், போட்டோ ஷூட் என பிஸியாக இருந்தார். இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து விஜய் நடித்த “லியோ” படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 2023ல் வெளியான ‘லியோ’ திரைப்படம் இந்தியாவின் வெற்றிப் படமாகும். இப்படத்தில் விஜய், திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிதந்திருந்தனர். இப்படத்தில், ஜனனி சிறிய அளவிலான வேடத்தில் நடித்திருந்தாலும் அவரின் தோற்றமும், வருகையும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.அத்தகைய ஜனனி தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்களில் ஜனனி மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் அதில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் கமெண்டில் கூறியதாவது, ” ஜனனி சிம்பிளா இருந்தாலும் செம்ம மாஸா இருக்குறாங்களே..!” எனக் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் அவரது அடுத்த படவாய்பிற்கானதாக இருக்கலாம் எனவும் சிலர் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.