விளையாட்டு

முடிவுக்கு வந்த 8 வருட காத்திருப்பு… தந்தையான ஜாகீர் கான்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

Published

on

முடிவுக்கு வந்த 8 வருட காத்திருப்பு… தந்தையான ஜாகீர் கான்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் முன்னாள் வீரர் ஜாகீர் கான். இந்திய அணியில் கடந்த 2000-ம் ஆண்டு அடியெடுத்து வைத்த இவர், 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக,  2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார். அவர் 2015 ஆம் ஆண்டுடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், தனது கிரிக்கெட் அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொண்டு ஊக்குவித்து வருகிறார். மேலும், திறமையான வீரர், வீராங்கனைகளை தானாகவே முன்வந்து பாராட்டியும் வருகிறார். தற்போது அவர் ஐ.பி.எல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசராகவும் பணியாற்றி வருகிறார். ஜாகீர் கான் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சாகரிகா கட்கேவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 8 வருட காத்திருப்புக்கு பிறகு இந்த தம்பதி தங்களது குழந்தையை கையில் ஏந்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு  கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். ஜாகீர் கான் – சாகரிகா கட்கே தம்பதியினர் தங்களது குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version