சினிமா
15 வருஷ காதலரை கரம்பிடிக்கும் விஷால் பட நடிகை அபிநயா…மெஹந்தி புகைப்படங்கள்..
15 வருஷ காதலரை கரம்பிடிக்கும் விஷால் பட நடிகை அபிநயா…மெஹந்தி புகைப்படங்கள்..
நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து பல மொழிகளில் நடித்த நடிகை என்ற சாதனையும் அபிநயா பெற்றுள்ளார்.விஷாலுடன் நடித்த போது அவருடன் காதல் என்றும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரவி பரபரபை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறேன்.என்னுடைய சின்ன வயது நண்பர் தான் என்னோட பாய் ஃபிரெண்ட். 15 ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது என்று கூறிய நிலையில் சில வாரங்களுக்கு முன் காதலர் வேகசீனா கார்த்திக் என்பவரை நிச்சயம் செய்திருந்தார்.தற்போது அவர்களுக்கு சில நாட்களில் திருமணமாகவுள்ள நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில் அபிநயா – கார்த்திக் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.