இந்தியா

இன்று மாலை கூடவுள்ள தமிழக அமைச்சரவை!

Published

on

இன்று மாலை கூடவுள்ள தமிழக அமைச்சரவை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடவுள்ள நிலையில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை தொடர்பில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதுடன் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது கவனத்தி ஈர்த்துள்ளது. 

Advertisement

சட்டசபையில் இன்று சுற்றுலா கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன.

இதேவேளை, சட்டமன்ற அலுவல்கள் இன்று மாலையுடன் நிறைவடைகிறதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version