சினிமா
எனக்கு வடிவேலு மீது அந்த வருத்தம் தான்.. ஓபனாக கூறிய சுந்தர்.சி
எனக்கு வடிவேலு மீது அந்த வருத்தம் தான்.. ஓபனாக கூறிய சுந்தர்.சி
தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி அமைந்தால் நமக்கு பிடிக்கும். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு வெற்றிக் கூட்டணி தான் சுந்தர்.சி மற்றும் வடிவேலு.இவர்கள் இணைந்து மக்களுக்கு கொடுத்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படம் தான்.தற்போது இவர்கள் கேங்கர்ஸ் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்பட நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது, எனக்கு வடிவேலு அவர்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும், நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான்.ஒரு காட்சிக்கு நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவிகிதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார். அவர் மீது எனக்கு வருத்தம் என்றால் இடையில் அவர் நடிக்காமல் இருந்தது தான் என்று பேசியுள்ளார்.