இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

Published

on

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர். 

Advertisement

கைதான இருவரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, குறித்த இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version