இலங்கை

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை – மன்னாரில் அநுர தெரிவிப்பு!

Published

on

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை – மன்னாரில் அநுர தெரிவிப்பு!

மன்னார் பகுதிகளில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தின் மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் முன்னெடுப்படும் எனறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

மன்னார் பஜார் பகுதியில் இன்று  காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

எனினும், அந்தத் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக நான்கு லட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version