இலங்கை

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில், 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் 12 ஆம் திகதி வருகை தந்துள்ளதுடன் அன்று 7,585 பேர் வருகை தந்தனர்.

இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 18,220 ஆகும்.

அதற்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 11,425 பேரும், ரஷ்யாவிலிருந்து 8,705 பேரும், ஜெர்மனியிலிருந்து 7,746 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version