சினிமா

பிக்பாஸ் 2 நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா..

Published

on

பிக்பாஸ் 2 நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா..

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி. தெகிடி, பாலாவின் அவன் இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் ஜனனி.பட வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.தற்போது ஒருசில படங்களில் நடித்து முடித்துள்ள ஜனனி, விமானி ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். அவருடன் நேற்று நிச்சயதார்த்தத்தையும் முடித்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.ஜனனியின் வருங்கால கணவர் ரோஷன் சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் விமானியாக செட்டிலாகியிருக்கிறார்.அவரது முழுப்பெயர் சாய் ரோஷன்ஷாம். ஜனனியும் ரோஷனும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version