சினிமா

போதைப்பொருள் சர்ச்சை…! “குட் பேட் அக்லி ” வில்லன் மீது மலையாள நடிகை புகார்…

Published

on

Loading

போதைப்பொருள் சர்ச்சை…! “குட் பேட் அக்லி ” வில்லன் மீது மலையாள நடிகை புகார்…

பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தரக்குறைவாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாள திரைப்படமான சத்திய வாக்குமூலம் படத்தின் போது படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி வின்சி அலோசியஸ் மீது போதையுடன் வந்த இவர் தரக்குறைவாக நடந்துள்ளதாக நடிகை புகார் அளித்துள்ளார்.இவர் அளித்துள்ள புகாரை தொடர்ந்து அம்மா அமைப்பிலுள்ள 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மலையாள நடிகர்கள் நடிகைகள் பலரும் நடிகைக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரியவந்துள்ளது.புகார் தொடர்பாக தீவிர விசாரணை எடுக்கப்படும் என கேரள திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. தற்போது பலத்த விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version