இலங்கை
மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்குத் தரப்புகள் வழக்கு!
மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்குத் தரப்புகள் வழக்கு!
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலும் 10 தரப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, வலிகாமம் தெற்கு பிரதேசசபை, பருத்தித்துறை பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை, நல்லூர் பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சிச் சபைகளில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தரப்புகளே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.