வணிகம்

லிட்டருக்கு 35 கி.மீ மைலேஜ்… ஸ்கெட்ச் போடும் மாருதி: எகிறும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு

Published

on

Loading

லிட்டருக்கு 35 கி.மீ மைலேஜ்… ஸ்கெட்ச் போடும் மாருதி: எகிறும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு

கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 2025-26ம் நிதியாண்டு பிறந்துள்ளது. இந்நேரத்தில், கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான பல்வேறு கார்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) வெளியாகி உள்ளன.  மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காருக்கான, கடந்த 2024-25ம் நிதியாண்டின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 216 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது.முந்தைய நிதியாண்டில், கடந்த 2023-24ம் நிதியாண்டில், மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 735 ஃப்ரான்க்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 23% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரானது, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள க்ராஸ்ஓவர் (Coupe Crossover) ரக கார் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை ரூ.7.52 லட்சமாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் என்னவென்றால், அது மைலேஜ் (Mileage) ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.51 கி.மீ மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 6 ஏர்பேக்குகள், 360டிகிரி கேமரா, ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன. ஆனால் வரும் காலங்களில் இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.ஃப்ரான்க்ஸ் காரில் புதிய ஹைப்ரிட் (Hybrid) இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டிருப்பதுதான் இதற்கு காரணம். இந்த புதிய இன்ஜின் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 35 கி.மீ மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஹைப்ரிட், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் புதிய ஹைப்ரிட் இன்ஜின் மாடல் 2026-ல் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை, இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version