சினிமா

15 வருட காதல்.. திருமண கோலத்தில் மின்னும் நடிகை அபிநயா.. அழகிய வீடியோ

Published

on

15 வருட காதல்.. திருமண கோலத்தில் மின்னும் நடிகை அபிநயா.. அழகிய வீடியோ

தமிழில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை அபிநயா.அந்த படத்திற்கு பின் சூர்யாவின் 7ம் அறிவு, தனி ஒருவன், வீரம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் பிஸியாக நடித்து வந்தவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார்.சமீபத்தில், நடிகை அபிநயா கடந்த 15 ஆண்டுகளாக சன்னி வர்மா என்பவரை காதலித்து வந்ததாக தெரிவித்து விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறினார்.இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் அபிநயா திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான வரவேற்பு விழா வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version