சினிமா

கர்ப்பமானதால் தான் கல்யாணம் செய்தாரா விஜே பிரியங்கா? பயில்வான் கொடுத்த ஷாக்..

Published

on

கர்ப்பமானதால் தான் கல்யாணம் செய்தாரா விஜே பிரியங்கா? பயில்வான் கொடுத்த ஷாக்..

விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், சிலர் ஏன் திடீர் திருமணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் பிரியங்கா – வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரியங்காவின் திடீர் திருமணம் குறித்து சில நாட்களாகவே ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் பத்திரிக்கையாள பயில்வான் அளித்த பேட்டியொன்றில், பிரியங்கா திருமணத்திற்கு 50 முதல் 60 பேர்வரை தான் வந்திருப்பார்கள். இந்த அவசர திருமணத்திற்கு என்ன காரணமாக இருக்கும், பிரியங்கா ஒரு வீடியோவை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது, அதனால் தான் திருமணம் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார்.அப்படியென்றால் இந்த இரண்டாவது திருமணத்துக்கு முன் பிரியங்கா கர்ப்பமாகிவிட்டாரா? அதனால் தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டாரோ என்ற கேள்வி எழத்தானே செய்கிறது என்று பயில்வான் பேசியுள்ளார். அவர் பேசியதை பலரும் திட்டியும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் சொல்லப்பட்டதே தவிர விடுப்பு தளத்திற்கு அவரது கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version