பொழுதுபோக்கு
‘சிறப்பான தரமான சம்பவம் பார்ப்பீங்க…’ சூர்யாவின் ‘ரெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு
‘சிறப்பான தரமான சம்பவம் பார்ப்பீங்க…’ சூர்யாவின் ‘ரெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரெட்ரோ படத்தின் டீரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட்ரோ படம் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ரெட்ரோ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (18.04.2025) நடைபெறுகிறது. Here is the trailer of #Retro Tamil – https://t.co/yfk6mhlE1lTelugu – https://t.co/di749tNEQgHindi – https://t.co/brmKWNRzv7#TheOne From May One ! #RetroTrailer#RetroAudioLaunch #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/akMeTpkkC5இந்நிலையில், சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ டிரெய்லரில் சூர்யா பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.‘ரெட்ரோ’ ஒரு கேங்ஸ்டர் படம் என்பது டிரெய்லர் காட்சிகளில் இருந்து வெளிப்படுகிறது. அதில், இனிமேல் தான் சிறபான தரமான சம்பவங்களைப் பார்ப்பீங்க என்று சூர்யா பேசும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சூர்யா ரசிகர்கள், ரெட்ரோ டிரெய்லரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.